கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூரில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம் பக்தி பாடல்கள் பாடி பக்தர்கள் வழிபாடு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 5 November 2024

கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூரில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம் பக்தி பாடல்கள் பாடி பக்தர்கள் வழிபாடு.

கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூரில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம் பக்தி பாடல்கள் பாடி பக்தர்கள் வழிபாடு. 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு சஷ்டி விழா கடந்த 2ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பல்வேறு வாகனங்களில் வள்ளி தெய்வானையுடன் ஜெயந்திநாதர் வீதி உலா நடைபெற்று வருகிறது. 

கந்த சஷ்டிகவிழாவையொட்டி பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மட்டுமின்றி நெல்லை, குமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்களுக்கு குடும்பம் குடும்பமாகவும் ,கந்த சஷ்டி குழுவினரும் சாரை சாரையாக வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கடலில் புனித நீராடியும் ,கோயில் வளாகத்தில் அமர்ந்து முருகன் பக்தி பாடல்கள் பாடியும் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். 

 பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில் அறநிலையத்துறையினர் மற்றும் கோயில் பணியாளர்களை செய்துள்ளனர். திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில அமைப்பு செயலாளருமான தொண்டைமான் திருச்செந்தூர் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad