நாசரேத் விஏஓ அலுவலகம் தொடங்கி லூக்கா மருத்துவமனை வரை நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறுவது பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் ஏரல் வட்ட தேர்தல் துணை வட்டாட்சியர் முத்து லட்சுமி, ஆழ்வார் திருநகரி குறுவட்ட வருவாய் ஆய்வாளர் மகாதேவன், கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் மற்றும் தலைமையில் நடைபெற்றது.
பேரணியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயக்குமார் துவக்க உரையாற்றினார் கிராம நிர்வாக அதிகாரி விளக்கயுரையாற்றினார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை கல்லூரியின் தாளாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார் ரூபன் ஆலோசனையின் பெயரில் கல்லூரியின் நிர்வாக அதிகாரி முனைவர் வினோதா, நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர். ஞானசெல்வன், உடற்கல்வி இயக்குனர் ஜோஸ்சுந்தர், பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment