சூரசம்ஹாரம் - திருச்செந்தூருக்கு 6-ஆம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 2 November 2024

சூரசம்ஹாரம் - திருச்செந்தூருக்கு 6-ஆம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


திருச்செந்தூர், சூரசம்ஹாரத்தையொட்டி வருகிற 6-ந் தேதி சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

அதன்படி 6-ந் தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

7-ந் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

www.tnstc.in மற்றும் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பஸ் நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

No comments:

Post a Comment

Post Top Ad