ஆழ்வார்திருநகரி கோவிலில் கருடசேவை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 5 October 2024

ஆழ்வார்திருநகரி கோவிலில் கருடசேவை.

ஆழ்வார்திருநகரியில் இன்று கருடசேவை. 

தென்திருப்பேரை அக். 6. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ ரெங்கநாதர் சன்னதியில் புரட்டாசி மாத 3 வது சனிக்கிழமை கருடசேவை நடந்தது. 

நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம் 10 மணிக்கு சகஸ்ர கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 11,.45 மணிக்கு அலங்காரம் செய்து நாலாயிர திவ்யப்பிரபந்தம் சாத்துமுறை. 12.45 மணிக்கு தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை. 7.30 மணிக்கு சுவாமி ஸ்ரீ ரெங்கநாதர் கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு 8 மணிக்கு கோவிலில் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சுவாமி இறங்கிய பின் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad