திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 5 October 2024

திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை.

திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

சூரங்குடி அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி மகன் குமார் மணி (41), கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 41வது வயதாகியும் திருமணம் ஆகவில்லையாம். இதனால் மன வேதனையில் இருந்த குமார் மணி நேற்று சூரங்குடி அருகே குமார சங்கராபுரத்தில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு யாரும் இல்லாத நேரத்தில் விஷம் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூரங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) சக்திவேல் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 -தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad