ரவுடிகளின் அராஜக கூடாரமாக மாறி வரும் திருச்செந்தூர் - தமிழ்நாடு வணிகர் சங்கம் வேதனை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 11 October 2024

ரவுடிகளின் அராஜக கூடாரமாக மாறி வரும் திருச்செந்தூர் - தமிழ்நாடு வணிகர் சங்கம் வேதனை.

ரவுடிகளின் அராஜக கூடாரமாக மாறி வரும் திருச்செந்தூர் - தமிழ்நாடு வணிகர் சங்கம் வேதனை.

திருச்செந்தூர், அக்.11, தமிழ்நாடு வணிகர் சங்கத்தின், மாநில இணைச் செயலாளர் செல்வகுமார். அவருடைய மகன் பாலகந்தன், ஆறுமுகம் மகன் கிருஷ்னமூர்த்தி என்பருடன் இணைந்து டீ கடையுடன் இணைந்த குளிர்பான கடை ஒன்றை, திருச்செந்தூர் சன்னதி தெருவில் நடத்தி வருகின்றார். 

இந்நிலையில் 07.10.2024 அன்று இரவு சுமார் 2.00 மணிக்கு, இந்த கடையை அண்ணாமலை லாட்ஜ் மற்றும் சக்தி சுவர்ணா பேக்கரி உரிமையாளர் தர்மராஜா அவருடன் மாணவர் இயக்க தலைவர் அஜித்குமார் தலைமையில் பத்து ரவுடிகள், ஜேசிபியுடன் வந்து மேற்படி கடையை இடிக்க முயற்சி செய்துள்ளனர். 

இதனிடையே இச்சம்பவம் குறித்து அங்கிருந்த கடையின் டீ மாஸ்டர், கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே வியாபாரிகள் சங்க செயலரும் பாலகந்தனின் தந்தையுமான செல்வகுமார், காவல் துறை உதவியுடன், மேற்படி கடையிணை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நபர்களை அப்புறபடுத்தியுள்ளனர். 

அதன் பிறகு 07.10.2024 அன்று காலையில் தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் காமராசு நாடார் தலைமையிலான குழுவினர், மேற்படி சம்பவம் குறித்து, திருச்செந்தூர் காவல் நிலையத்தில் எழுத்து பூர்வமாக புகார் செய்துள்ளனர். ஆனால் இன்று 11.10.2024 வெள்ளிக்கிழமை வரை, நான்கு நாட்கள் கடந்தும் எப் ஐ ஆர் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறதாக கூறப்படுகிறது. 

மேலும் இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் காமராசு நாடார் கூறியிருப்பதாவது: 
கடந்த ஐந்து வருடங்களாக ஆதீனத்திற்கு மேற்படி கடைக்கு வாடகை செலுத்திய ரசீது உள்ளது, இப்போது ஆதீனத்திற்கும் நமக்கும் பிரச்சினை இல்லை. வியாபாரிகள் மீது வன்முறையில் இறங்கிய ரவுடிகள் தான் பிரச்சினை. இதே போல் திருச்செந்தூர் - திருநேல்வேலி ரோட்டில் கடந்த மாதம், நான்கு வணிகர்கள் இதே போல பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

எனவே இச்சம்பவம் தொடர்பாக காவல் துறை நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்துவது, மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தப்பிக்க வாய்ப்பு கொடுப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது எனவும், காவல் துறையை நம்பி வியாபாரம் செய்யும் வணிகர்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். காவல் துறை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமா? அல்லது வணிகர்களை போராட்ட களத்தில் தள்ளுமா? என்றும் இச்சம்பவம் வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தையும் அச்ச உணர்வையும் உண்டு பண்ணியுள்ளதாக காமராசு நாடார் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக, காவல் துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து பிரச்சினை வளராமல் முற்றுப்புள்ளி வைக்கவும், தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பியுள்ள மற்றொரு கடிதத்தில் வணிகர்களுக்கு தனியே நல வாரியம் அமைத்து தர வேண்டி தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad