திருச்செந்தூர் கடை திறப்பு விழா - வணிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 7 October 2024

திருச்செந்தூர் கடை திறப்பு விழா - வணிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்பு.

திருச்செந்தூர் பட்டர் குளம் தெருவில் ஸ்ரீ வினாசினி பேன்சி ஸ்டோர் திறப்புவிழா
வணிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்பு 

திருச்செந்தூர் பட்டர் குளம் தெருவில் (ஸ்டேட்பேங்க் அருகில்) தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை தலைவர் உடன்குடி உத்திரம் ஸ்ரீ வினாசினி பேன்சி ஸ்டோரை தொடங்கி உள்ளார். இந்த கடையின் திறப்பு விழா இன்று நடந்தது. 

விழாவிற்கு தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் வேலாயுத பெருமாள் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் முரளி சங்கர், தெற்கு மாவட்ட செயலாளர் சேக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 ஸ்ரீ வினாசினி பேன்சி ஸ்டோரை மண்டல தலைவர் கோடீஸ்வரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முதல் விற்பனையை மண்டல தலைவர் கோடீஸ்வரன், மாவட்ட தலைவர் வேலாயுத பெருமாள் தொடங்கி வைத்தனர். 

விழாவில் மாவட்ட செய்தி தொடர்பாளர் முத்துக்குமார், மாவட்ட சட்ட ஆலோசகர் சுப்புராஜ், தெற்கு மாவட்ட தேமுதிக தலைவர் சதீஷ், செயலாளர் சித்திரை செல்வன், உடன்குடி ஒன்றிய தலைவர் உத்திரம், செயலாளர் பழரசம் சங்கர், நகரத் தலைவர் உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்களை கடை உரிமையாளரும், மாவட்ட துணை தலைவருமான உத்திரம் சால்வை அணிவித்து வரவேற்றார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் ரவி, கடை உரிமையாளர் உத்திரத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad