தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 5-ஆம் நாள் விழிப்புணர்வு நடைபயணம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 6 October 2024

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 5-ஆம் நாள் விழிப்புணர்வு நடைபயணம்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 5-ஆம் நாள் விழிப்புணர்வு நடைபயணம்.

நாசரேத், அக் .05, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவுறுத்தலின் பேரில், தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 155 வது பிறந்தநாள், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 49 வது நினைவு நாள், லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் 120 வது பிறந்தநாள் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை முன்னிட்டு,

காந்திய சிந்தனை, அமைதி, மதநல்லிணக்கம், அகிம்சை, வெறுப்பு அரசியலுக்கு எதிரான பிரச்சாரம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு எதிரான பொய் மற்றும் அவதூறு பிரச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வை, பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை தினமும் மாலை 04:30 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக 5-ஆம் நாள் நடைபயணமாக, இன்று 06-10-2024, ஞாயிற்றுக்கிழமை அன்று நாசரேத், பரி.லூக்கா மருத்துவமனையிலிருந்து சந்தி வழியாக நாசரேத் பேருந்து நிலையம் வரை நடைபயணம் மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது.  

இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து வட்டார, நகர, கிராம கமிட்டி தலைவர்கள், துணை அமைப்பு மாவட்டத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட, வட்டார, நகர, கிராம கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமாகிய ஊர்வசி S. அமிர்தராஜ் நாசரேத் வழிகாடுதல் படி, நாசரேத் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வகுமார், வார்டு கவுன்சிலர்கள் எட்வர்ட் கண்ணப்பா, செல்வின், வார்டு பொறுப்பாளர்கள் ஜெயக்குமார், பிரேம்குமார், ஏ.டி.ஹெச் சந்திரன், ஜோசப், பாஸ்கர், பிரகாஷ், விஜி, ராஜா சிங், நசரேயன், காமராஜ், விஜய், ரொனால்ட் செல்வப்ரகாஷ், செல்வகுமார், கெர்சோம் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad