தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதன் மூலம் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றால் சந்தோஷம் அடைவார்" - தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 19 October 2024

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதன் மூலம் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றால் சந்தோஷம் அடைவார்" - தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

"ரூ.10 லட்சம் கோடி தொழில் முதலீடு வந்தாலும் சந்தோஷம் அடையாத தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதன் மூலம் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றால் சந்தோஷம் அடைவார்"என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நடைபெற்றுவரும் நியோ டைடல் பார்க் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த பின் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,"தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஒரு சில மாவட்டங்களில் குவிந்து வருவதை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் பரவலான தொழில் வளர்ச்சி உருவாவதன் மூலம் அந்த பகுதி இளைஞர்களுக்கு தங்கள் பகுதிகளிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதன் அடிப்படையில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி திட்டமிடப்படுகிறது. அந்த வகையில் தான் தூத்துக்குடி நியோ டைடல் பார்க் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.அதன் பணிகளை அமைச்சர் கீதா ஜீவனுடன் ஆய்வு மேற்கொண்டேன்.

நியோ டைடல் பார்க் கட்டுமானத்தில் சில நவீன வடிவமைப்பு அம்சங்களை மேற்கொள்வதன் மூலம் அதில் பணியாற்றுபவர்கள் ஒரு நவீன பணி சுற்றுச்சூழலை உணரும் வகையில் கட்டுமான பணிகள் செய்யவுள்ளோம்.மேலும் கோவிட் காலத்திற்கு பிறகு பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் "ஒர்க் பிரம் ஹோம்" என்பதை நடைமுறையாக்கிய பிறகு பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் ஊர்களிலேயே பெற்றோருடன் இருந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. 

அந்த வகையில் நியோ டைடல் பார்க் இப்பகுதியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு இங்கேயே பணிபுரிய வாய்ப்பு ஏற்படுத்துகிறது.இந்த லியோ டைடல் பார்க்கில் 11மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை தொடங்க இடம் கேட்டுள்ளன.அவற்றிற்கான இடங்களை ஏறக்குறைய சரி சமமாக வழங்க முடிவு செய்துள்ளோம்.

தமிழக வரைபடத்தில் எந்த பகுதியில் தொட்டாலும் அங்கு தொழில் தொடங்க தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகள் உள்ளன என்று தெரியும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு பின் தமிழகம் தொழில் தொடங்குவதில் மற்ற நாடுகளுக்கு போட்டியாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் தமிழகத்திற்கு போட்டியாக எந்த மாநிலமும் இல்லை.மற்ற நாடுகளுடன் தமிழகம் போட்டியிடுகிறது.தூத்துக்குடி அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அதன் தொழில்துறை அடிப்படை கட்டமைப்பு வசதிகளான துறைமுகம், விமான நிலையம், தூத்துக்குடி -மதுரை தொழிற் வழித்தடம் போன்றவற்றை கொண்டுள்ளது.இதன் அடிப்படையில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான வின் பாஸ்ட் நிறுவனம் கட்டமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் இங்கு கார் உற்பத்தி தொடங்கி விடும்.தூத்துக்குடியில் புதிய தொழில் நிறுவனங்களை விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

ரூ.10 லட்சம் கோடி முதலீடு வந்தாலும் சந்தோஷம் அடையாத தமிழக முதல்வர் ஸ்டாலின் அதன் மூலம் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றால் சந்தோஷம் அடைவார் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், தூத்துக்குடி மேயர் ஜெகன் உட்பட பலர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad