தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில ஆட்சியர் பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் இதுநாள் வரை 249.56 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது. பாபநாசம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் 28.10.2024 அன்று முதல் திறந்துவிட கருத்துரு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாணை பெறப்பட்ட உடன் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 30.71 மெ.டன், சோளம் 10.22 மெ.டன், உளுந்து 15.556 மெ.டன்;,கம்பு20.325 மெ.டன பாசிப்பயறு0.599 மெ.டன்,நிலக்கடலை12.995 மெ.டன், மக்காச்சோளம் 34.48 இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் 4857 மெ.டன் யூரியா, 3569 மெ.டன் காம்ப்ளக்ஸ், 3065 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 471 மெ.டன் பொட்டாஷ் உரங்கள் இருப்பில் உள்ளன.
நடப்பு அக்டோபர், 2024 மாத தேவைக்கு நமது மாவட்டத்திற்கு 4250 மெ.டன் யூரியா, 2710 மெ.டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 1100 மெ.டன் டி.ஏ.பி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட உர நிறுவனங்களால் இம்மாத தேவைக்கான உரங்கள் 933 மெ.டன் யூரியா 2590 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 1820 மெ.டன் காம்ப்ளக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
2023-2024ம் ஆண்டு ராபி பருவத்தில் பிரதமமந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உளுந்து பயிருக்கு ரூ.58.25கோடி,பாசிப்பயறுக்கு ரூ.16.53கோடி,மக்காச்சோளத்திற்கு ரூ.90.07கோடி,கம்புபயிருக்கு ரூ.9.38கோடி,சோளப் பயிருக்கு ரூ.6.69கோடி,நிலக்கடலை பயிருக்கு ரூ.0.12கோடி,எள் பயிருக்கு ரூ.0.042கோடி, சூரியகாந்தி பயிருக்கு ரூ.3.02கோடி மொத்தம் ரூ.184.102கோடி காப்பீட்டுத்தொகை இப்கோ-டோக்கியோ காப்பீட்டு நிறுவனத்தால் விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள நெல்-ஐஐஐ மற்றும் பருத்தி ஆகிய பயிர்களுக்கும் விடுபட்டுள்ள உளுந்து,பாசிப்பயறு மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கும் அக்டோபர் மாத இறுதிக்குள் இப்கோ-டோக்கியோ காப்பீடு நிறுவனத்தால் பயிர் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு விடுவிக்கப்படும்.
புதுப்பிக்கப்பட்ட பிரதமமந்திரிபயிர் காப்பீட்டுத் திட்டம் 2024-25ஆம் ஆண்டிற்கு ராபிபருவ பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு தூத்துக்குடிமாவட்ட விவசாயிகளை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2023 டிசம்பர் மாதம் பெய்த அதீதகன மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமாக பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பேரிடர்க்கு முன் பதிவு செய்த விவசாயிகளுக்கு வாழை, கொத்தமல்லி, வெங்காயம் மற்றும் சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு ரூ.21.96 கோடி இழப்பீட்டு தொகையானது 26382 விவசாயிகளுக்கு இப்கோ-டோக்கியோ காப்பீடு நிறுவனத்தால் விடுவிக்கப்பட்டு விட்டது.
பேரிடருக்கு பிறகு பதிவு செய்த விவசாயிகளும் பயன்பெறும் வகையில் காப்பீடு திட்டத்திற்குரிய மகசூல் அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் பயிர் சாகுபடி பரப்புக்கும் அதிகமான பதிவுகளை, இணையதள நீக்கம் செய்து மத்திய அரசிடம் இருந்து கிடைக்கப்பெற வேண்டிய பங்குத் தொகை பெறும் நடவடிக்கைகாகவும், மத்திய அரசின் ஓப்புதலுக்காகவும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடப்பு வாரத்தில் மாநில அரசின் நிதி 5 கோடி ரூபாய் பயிர்காப்பீட்டு நிறுவனத்திற்கு விடுவிக்கும் பணி நடைமுறைக்கு வரவிருக்கிறது. மீதமுள்ள 37 கோடி ரூபாய் நிதியானது மத்திய மாநில அரசின் பங்களிப்பாக பெற்று பயிர்காப்பீடு நிறுவனம் மூலம் தகுதியான அனைத்து பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணி அடுத்த இரண்டு வார காலங்களில் முடிக்க பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 18.10.2024 வரை ரூ.58.48 கோடிக்கு4704 விவசாயிகளுக்கு விவசாய பயிர் கடனாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3451சிறு/குறு விவசாயிகளுக்கு ரூ.43.12கோடி விவசாய பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment