தூத்துக்குடியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள உலர் சாம்பலுடன் லாரியை கடத்திச்சென்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி புதிய துறைமுக வளாகத்தில் தனியாருக்கு சொந்தமான ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் உள்ளது. இங்கிருந்து கடந்த 5ஆம் தேதி லாரியில் 24 டன் உலர் சாம்பலை வெளிவூருக்கு அனுப்பினர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். ஆனால் அந்த உலர் சாம்பலை டிரைவர் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்லாமல் வேறு எங்கு கடத்தி சென்று விட்டாராம்.
இது சம்பந்தமாக அந்நிறுவன மேலாளர் ஜோசப் செல்வம் என்பவர் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப் பதிந்து, விசாரணை நடத்திய லாரி டிரைவர் தூத்துக்குடி 3 சென்ட் அந்தோனியார் புரத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சந்திரசேகர் (29) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, 24 டன் உலர் சாம்பல் மற்றும் லாரியை பறிமுதல் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment