ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் நலத்திட்ட உதவிகள் - எம்எல்ஏ தொடங்கி வைத்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 13 September 2024

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் நலத்திட்ட உதவிகள் - எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் குறுக்குசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில்பொதுப்பணிதுறையின் மூலம் 76.73 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக நான்கு வகுப்பறைகள் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அதனைத் தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை 107 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வழங்கினார். 


மேலும் முதலமைச்சர் கோப்பைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கம் விளையாட்டுப் பிரிவில் மாநில அளவில் தேர்வாகியுள்ள மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.


இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் வட்டாட்சியர் ஆனந்த் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அரவிந்த் பள்ளி தலைமை ஆசிரியை அன்னலட்சுமி உதவி தலைமை ஆசிரியர் ஜான் ஜோசப் கிராம நிர்வாக அலுவலர் கீதா மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி கொடியன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் கிளை செயலாளர் ஜேக்கப் அரசு ஒப்பந்ததாரர்கள் கருப்பசாமி முருகன் தெற்கு ஆவரங்காடு கிருஷ்ணசாமி மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad