தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு, திருத்த சேவைகள் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் என முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்(பொறுப்பு) செ.சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி - திருச்செந்தூர் பிரதான சாலையில் உள்ள தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வரும் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும்.
அரசு அறிவுறுத்தலின்படி 10 ஆண்டுகள் நிறைவுற்ற ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொள்ளவும் மேலும் பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் ஆதார் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் பொதுமக்கள் இந்த சிறப்பு ஏற்பாட்டை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment