தூத்துக்குடியில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி தாளமுத்து நகர், டி.சவேரியார் புரத்தைச் சேர்ந்தவர் ராஜன் பிரபு. இவரது மனைவி குருமணி செல்வம் (45). ராஜன் பிரபு, ஆடுகள் வளர்த்து வருகிறார். இதில் 2 ஆடுகள் காணாமல் போய் விட்டதாம் இதனால், அவர் மனைவியை திட்டினாராம். இதில் மன வேதனை அடைந்த குருமணி செல்வம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடல் முழுவதும் கருகிய நிலையில், பலத்த தீக்காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்-.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment