ரியல் எஸ்டேட் அதிபருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 21 September 2024

ரியல் எஸ்டேட் அதிபருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது


கோவில்பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கடலைக்காரத் தெருவைச் சேர்ந்தவர் க. சதீஷ் (43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 

இருவருக்கும், இவரது சகலை கோவில்பட்டி முத்து நகர் முதல் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் கூலித்தொழிலாளி சரவணகுமாருக்கும் (40) இடையே குடும்பப் பிரச்னை தொடர்பான வழக்கு, குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இளையரசனேந்தல் சாலையில் உள்ள ஹோட்டலில், குடும்பத்துடன் சதீஷ் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சரவணகுமார், அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததுடன், அங்கு நின்று கொண்டிருந்த சதீசுக்கு சொந்தமான காரை உருட்டுக் கட்டையால் அடித்து சேதப்படுத்தினாராம். 

தடுக்க வந்த சதீஷை தாக்கினாராம். இதுகுறித்து சதீஷ் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, சரவணகுமாரை நேற்று கைது செய்தனர். 

 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad