ஏரல் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:- ஏரல் தேர்வு நிலைபேரூராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார்கள் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது கண்டறி யப்பட்டால், குடி நீர் இணைப்பு துண்டிப்பு, மின் மோட்டார் பறிமுதல் செய் தல், அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, மின் மோட்டார்கள் பொருத்தி குடிநீர் உறிஞ்சு வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
மேலும் பொதுமக் கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், என தெரிவித்துள்ளார்.
ஏரல் #தூத்துக்குடி #ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா #
No comments:
Post a Comment