பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி:அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 19 September 2024

பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி:அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்!

தூத்துக்குடியில் "பெண் குழந்தைகளை காப்போம்" விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். 

தூத்துக்குடியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் காமராஜ் பெண்கள் கல்லூரியில் இருந்து "பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற விழிப்புணர்வு பேரணியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். 

இதில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், வருவாய் கோட்டாட்சியர் பிரபு, மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, கல்லூரி முதல்வர் வான்மதி, மாவட்ட மகளிர் அதிகார மைய ஒருங்கிணைப்பாளர் நிவேதிதா, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad