செப்.11, அகில பாரத இந்து மகா சபா சார்பில் உடன்குடியில் விநாயகர் சிலை ஊர்வலம் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அகில பாரத இந்து மகா சபா சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உடன்குடி, சாத்தான் குளம், திருச்செந்தூர், கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி ஒன்றிய பகுதிகளில் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று திருச்செந்தூர் கடலில் கரைக்கப்பட்டன. உடன்குடி ராமகிருஷ்ணா பள்ளி அருகில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்திற்கு மாநில செயலாளர் ஐயப்பன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், பசுபதி, உடன்குடி நகர தலைவர் மாரியப்பன், மாவட்ட பொது செயலாளர் முத்துகிருஷ்ண பெருமாள், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவராஜ், சதுர்த்தி கமிட்டி துரை பாண்டியன், குலசை நகர செயலாளர் ஹரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மகளிர் விநாயகர் சிலை ஊர்வலத்தை இந்து மகா சபா மகளிர் அணி ஒன்றிய அமைப்பாளர் லட்சுமி வழி நடத்தினார்.
ஊர்வலத்தில் மாவட்டத் துணைத் தலைவர் பகவதி பாண்டியன், நிர்வாகிகள் ஐயப்பன், சுடலைகண், ரவிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிலை கரைபிற்குபின் திருச்செந்தூர் கடற்கரையில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு நகர தலைவர் மாயாண்டி தலைமை வைத்தார். ஒன்றிய தலைவர் முருகேசன், நிர்வாகிகள் ராஜா, கணேஷ், சின்னத்துரை, ஐயப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment