தூத்துக்குடி மாநகராட்சியுடன் 7 ஊராட்சிகள் இணைப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 29 September 2024

தூத்துக்குடி மாநகராட்சியுடன் 7 ஊராட்சிகள் இணைப்பு.

தூத்துக்குடி மாநகராட்சியுடன் 7 ஊராட்சிகள் இணைக்க இறுதி பட்டியல் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க அதிகாரிகள் ஆய்வறிக்கை செய்து அரசுக்கு அனுப்பியிருந்தனர். இந்த நிலையில், தமிழகம் முழுவதிலும் ஒரு சில கிராமங்கள் அந்தந்த பகுதி மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைக்க பரிந்துரைக்கப்பட்டது. 

தூத்துக்குடி மாநகராட்சியுடன் 7 ஊராட்சிகளை இணைத்து தமிழக‌ அரசுக்கு அறிக்கை அனுப்பப்ப‌ட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம், சில்லாநத்தம், மாப்பிள்ளையூரணி, அய்யனடைப்பு, கோரம்பள்ளம், மறவன்மடம், ஆட்சியர் அலுவலகம், முள்ளக்காடு ஆகிய 7 ஊராட்சிகளை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad