தூத்துக்குடி மாவட்டம் ‘நமோ ட்ரோன் சகோதரி” என்ற திட்டத்தின்கீழ் ரூ.13 இலட்சம் மதிப்பிலான ட்ரோன் பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் செய்முறை விளக்கம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 19 September 2024

தூத்துக்குடி மாவட்டம் ‘நமோ ட்ரோன் சகோதரி” என்ற திட்டத்தின்கீழ் ரூ.13 இலட்சம் மதிப்பிலான ட்ரோன் பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் செய்முறை விளக்கம்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று(19.09.2024), விவசாயப் 
பெருமக்கள் விவசாயத்தில் நவீன யுத்திகளை பயன்படுத்தி விவசாயம் செய்வது குறித்து 
விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் ‘நமோ ட்ரோன் 
சகோதரி” என்ற திட்டத்தின்கீழ் ரூ.13 இலட்சம் மதிப்பிலான ட்ரோன் பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் உஷா லட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் 
க.இளம்பகவத், தலைமையில் செய்முறை விளக்கம் செய்து காண்பித்து, விவசாயத்தில் ட்ரோன் பயன்படுத்துவதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு 
எடுத்துரைத்தார்கள்.


விவசாயத்தில் நவீன யுத்திகளை உட்புகுத்தி விளைச்சலை அதிகப்படுத்துவதற்காக 
பல்வேறு புதுவிதமான முயற்சிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலமாக மேற்கொண்டு வருகிறது. 


நவீன இயந்திரங்களை பயன்படுத்தி விவசாய செயல்பாட்டு முறைகளை எளிதாக்குவதன் மூலம் விவசாயிக்கு ஏற்படும் செலவுகளை குறைத்து உற்பத்தியை அதிகரிக்க இயலும்.
அந்த வகையில் விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் ‘நமோ ட்ரோன் 
சகோதரி” திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுவைச் சார்ந்த படித்த பெண்களுக்கு ரூ7.00 
இலட்சம் மதிப்புடைய ட்ரோன், ரூ6.00 இலட்சம் மதிப்புடைய இதர உபகரணங்கள் (பேட்டரி- 2 
செட், ஜெனரேட்டர்- 1, பேட்டரி வாகனம்- 1) வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டாரம் லிங்கம்பட்டி ஊராட்சியில் கனிமொழி மகளிர் சுய உதவிக்குழுவைச் சார்ந்த உஷா லட்சுமி என்ற பெண்ணிற்கு 
நமோ ட்ரோன் சகோதரி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. 


இக்கருவியினை பயன்படுத்த 
ஒரு ஏக்கருக்கு ரூ.500- வசூலிக்கப்படுவதாகவும் (இடுபொருள், மூலப்பொருள், போக்குவரத்து நீங்கலாக.) தெரிவித்தார். எனவே, விவசாய பெருமக்கள் திருமதி.உஷா லட்சுமி அவர்களை 9600346646 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு 
கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்கள்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விவசாயத்தில் ட்ரோன் பயன்படுத்துவதினால் எவ்வாறெல்லாம் செலவு 
குறைகிறது, நீர் மேலாண்மை கையாளப்படுகிறது, மகசூல் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு 
தகவல்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்கள்.


இந்நிகழ்வின்போது, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மல்லிகா, இணை 
இயக்குநர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் 
(வேளாண்மை).மனோரஞ்சிதம், துணை ஆட்சியர் (பயிற்சி).சத்யா, அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad