தூத்துக்குடி - JSW நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி மூலம் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி, பர்மா காலணி புதிய நியாய விலைக் கடை எம்.பி. திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 17 August 2024

தூத்துக்குடி - JSW நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி மூலம் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி, பர்மா காலணி புதிய நியாய விலைக் கடை எம்.பி. திறந்து வைத்தார்.

தூத்துக்குடி, ஆகஸ்ட்.17, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சுந்தரவேல்புரத்தில் JSW நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி மூலம் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையம் மற்றும் பர்மா காலணியில் ரூ.14 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையினையும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில் இன்று (17.08.2024) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் நடத்தக்கூடிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கட்டடம் என்பது JSW நிறுவனத்தின் உதவியோடு கட்டப்பட்டிருக்கக்கூடிய அங்கன்வாடி. அது மட்டுமல்லாமல் இன்று மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கக்கூடிய மகிழ்ச்சியான நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறோம். JSW நிறுவனம் இந்த அங்கன்வாடி கட்டடத்தை கட்டி தந்துள்ளார்கள். 

பல்வேறு பகுதிகளில் அங்கன்வாடிகளை புதுபித்தும் தந்துள்ளார்கள். இன்று மட்டும் 80 மாணவ, மாணவியர்க்கு சுமார் 27 இலட்சம் மதிப்பில் ஊக்கத்தொகை தரக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகவும் நடந்துகொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பு நிதியை மக்களுக்கு சென்று சேராத ஒன்றாக வைத்திருக்கக்கூடிய ஒரு சூழலில், தொடர்ந்து நமது மாவட்டத்தில் உள்ள மக்களுக்காக வழங்கி கொண்டிருக்கக்கூடிய இந்நிறுவனத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

இதேபோல், மற்ற நிறுவனங்களும் தங்களுடைய பங்களிப்பை தருவதற்கும், மக்களுக்கான உன்மையான திட்டங்களை உருவாக்கி தருவதற்கும்; முன்வர வேண்டும். கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று. ஒரு காலக்கட்டத்தில் நமக்கெல்லாம் கல்வி மறுக்கப்பட்டது. சில நபர்கள் தான் படிக்க வேண்டும் சில நபர்களுக்கு படிப்பதற்கான உரிமைக்கிடையாது என்று இருந்த ஒரு காலக்கட்டத்தை தாண்டி இன்று அனைவருக்கும் கல்வி கொடுக்கக்கூடிய ஒரு நிலையை நாம் உருவாக்கியுள்ளோம். 

ஆனால், அதையும் தாண்டி படிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக இன்று தமிழகத்தின் முதலமைச்சர் புதுமைப்பெண் என்ற திட்டத்தை அறிவித்து, அரசு பள்ளிகளில் படித்த ,மாணவியர்கள் புதுமைப்பெண் திட்டத்தின் வழியாக உயர்கல்விக்கு பயில மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்கள். 
இப்போது தமிழ்புதழ்வன் என்ற புதியத் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. மாணவிகளுக்கு மட்டுமில்லை மாணவர்களுக்கும் உதவிகரம் நீட்டுவோம் என்று மாணவர்களுக்காக இந்த திட்டத்தை தொடங்கி மாதம் ஆயிரம் ரூபாய் கல்லூரி படித்து முடிக்கும் வரை வழங்கப்படுகிறது. ஏனென்றால் கல்வி என்பது இந்த சமுதாயத்தில் மாணவர்களுக்கு ஒரு மறுமலர்ச்சியை, ஒரு எழுச்சியை உருவாக்கக்கூடிய ஒன்று என்பதை நினைவில் கொண்டு மாணவர்களும் அதை கருத்தில் கொண்டு படிக்க வேண்டும், இந்த சமூகத்தை மாற்ற வேண்டும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது:-
 JSW சமூக பொறுப்பு நிதியிலிருந்து என்னுடைய சட்டமன்ற தொகுதியில் இருக்கக் கூடிய அங்கன்வாடி கட்டிடடம் கட்ட வேண்டும் மற்றும் பராமரிப்புகள் செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்ட போது அவர்கள் இன்றைக்கு முன் வந்து மாநகராட்சி பகுதியில் 4 அங்கன்வாடி கட்டடம் கட்டி கொடுத்துள்ளார்கள். இன்றைக்கு முதலாவது கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இது போல் அவர்கள் பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மாணவர்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு பள்ளிகளுக்கு வாங்கி கொடுத்துள்ளார்கள். சமூக பொறுப்பு நிதியை சமூகத்தின் மீது பொறுப்பு கொண்டு இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இங்கு படிக்கும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அவர்களுக்கு அடிப்படை கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக நம் முதலமைச்சர் அவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனை அதிகம் கவனம் செலுத்தி அவர்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, துணைத் தலைவர் JSW பி.தென்னவன், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) முரளி கண்ணன், 4வது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ம.ரூபிபெர்னாண்டோ, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் திட்ட அலுவலர் (மு.கூ.பொ.,); எம்.பி.காயத்ரி மற்றும் மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad