குலசேகரன் பட்டினம்... முத்தாரம்மன் கோயில்....ஆடி கொடை விழாவில் கும்பம் திருவீதி எழுந்தருளல்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு... - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 7 August 2024

குலசேகரன் பட்டினம்... முத்தாரம்மன் கோயில்....ஆடி கொடை விழாவில் கும்பம் திருவீதி எழுந்தருளல்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

 


குலசேகரன் பட்டினம்... முத்தாரம்மன் கோயில்....ஆடி கொடை விழாவில் கும்பம்  திருவீதி எழுந்தருளல்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் பிரசித்தி பெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கொடை விழா 3 நாட்கள்  நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆடி கொடை விழா நேற்று திங்கட்கிழமை தொடங்கியது. இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை  காலை 6மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ,காலை 10 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருதல் நடைபெற்றது.  செண்டை மேளம் முழங்க கும்பம் எடுத்து வரப்பட்டது. இதில ஏராளமான பக்தர்கள்,திருநங்கைகள் கலந்து கொண்டனர்.மாலை 5 மணி மற்றும் 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ,இரவு 8 மணிக்கு வில்லிசை 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் நடக்கிறது. நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு சிறப்பு மகுடம் ,11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. இரவு 8:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை  நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், அறங்காவலர்கள் ரவீந்திரன் குமரன், மகாராஜன் ,கணேசன், வெங்கடேஸ்வரி ஆகியோர் செய்துள்ளனர்.   குலசை கொடை விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  பாலாஜி சரவணன் உத்தரன்படி  திருச்செந்தூர்  டிஎஸ்பி வசந்த ராஜ்  தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார்  பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad