வளர்பிறை சஷ்டியையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம்... - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 11 August 2024

வளர்பிறை சஷ்டியையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம்...


வளர்பிறை சஷ்டியையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம்...


முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினம் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் பல மடங்கு  அதிகமாக இருக்கும். அவ்வாறு வரும் பக்தர்கள் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்துவதுடன், கடலில் புனித நீராடி சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில்  வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு  திருச்செந்தூரில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. கோயில் வளாக முழுவதும் பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளித்தது. கடலில் புனித நீராடிய பக்தர்கள்  பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் . மேலும் பக்தர்களின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை அறங்காவலர் குழு தலைவர் முருகன் ஆலோசனைப்படி கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad