மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 29 August 2024

மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி.


தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி, மூக்குப்பீறி, மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி, மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து திருச்செந்தூர் வட்டார அளவிலான 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான பூ பந்தாட்ட போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றன. 

இதில் பல அணிகள் கலந்து கொண்டன. போட்டியினை மூக்குப்பீறி சேகரத் தலைவர் போதகர் ஞானசிங் எட்வர்ட் ஆரம்ப ஜெபம் செய்து வைத்து போட்டியை துவங்கி வைத்தார். முன்னதாக தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி தாளாளர் செல்வின் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் ஆண்கள் 14 வயதிற்கான போட்டியில் முதலிடத்தை காஞ்சி சங்கரா மேல்நிலைப்பள்ளியும், இரண்டாம் இடத்தை தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியும் பெற்றது.


ஆண்கள் 17 வயதிற்கான போட்டியில் முதலிடத்தை காஞ்சி சங்கரா மேல்நிலைப்பள்ளியும், இரண்டாம் இடத்தை தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியும் பெற்றது. ஆண்கள் 19 வயதிற்கான போட்டியில் முதலிடத்தை தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியும இரண்டாம் இடத்தை காஞ்சி சங்கரா மேல்நிலைப்பள்ளியும் பெற்றது. பெண்கள் 14 வயதிற்கான போட்டியில் முதலிடத்தை தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியும், இரண்டாம் இடத்தை காஞ்சி சங்கரா மேல்நிலைப்பள்ளியும் பெற்றது.

பெண்கள் 17 வயதிற்கான போட்டியில் முதலிடத்தை காஞ்சி சங்கரா மேல்நிலைப்பள்ளியும், இரண்டாம் இடத்தை தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியும் பெற்றது. பெண்கள் 19 வயதிற்கான போட்டியில் முதலிடத்தை காஞ்சி சங்கரா மேல்நிலைப்பள்ளியும், இரண்டாம் இடத்தை தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை பள்ளி தலைமையாசிரியை ஜீலியட் செயசீலி மற்றும் உதவி தலைமை ஆசிரியை செல்வி டார்லிங் வழங்கினர். 

இறுதியாக தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் டாக்டர் பிரைற்றன் ஜோயல் நன்றியுரை வழங்கினார்.போட்டிக்கான ஏற்பாடுகளை தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி தாளாளர் செல்வின், தலைமையாசிரியை ஜீலியட் ஜெயசீலி, உடற்கல ;வி ஆசிரியர்கள் டாக்டர் பிரைற்றன் ஜோயல், ஜேஸ்மின் ஏஞ்சல்குமாரி, ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

அந்தோணி ராஜா 
தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad