தைக்காவூர் முத்தாரம்மன் கோவிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 8 July 2024

தைக்காவூர் முத்தாரம்மன் கோவிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம்


தைக்காவூர் முத்தாரம்மன் கோவிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் யாகபூஜையுடன் இன்று விழா தொடங்கியது



திருச்செந்தூர் அருகே தைக்காவூரில் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் முடிவுற்று வரும் புதன்கிழமை நடக்கிறது. இதையொட்டி இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கியது. மகாகணபதி ஹோமம், தீரவ்யாஹூதி, பிரம்மசார்ய பூஜைகள் நடந்தது. காலை 9.30 மணிக்கு மகாலட்சுமி ஹோமம், நவக்கிரகஹோமம், கோ பூஜையும், மாலை 5.30 மணிக்கு புனிதநீர் எடுத்து வருதல், மாலை 6 மணிக்கு வாஸ்துசாந்தி, கும்பஅலங்காரம், முதலாம் கால யாகசாலை பூஜை நடந்தது. செவ்வாய்கிழமை காலை 8.30 மணிக்கு 2ம் கால யாகபூஜை, வேதகார்ச்சனை, திருராகதாளங்கள் சமர்பித்தல், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, இரவு 7மணிக்கு குரு ஓரையில் எந்திர ஸ்தாபனம் நடக்கிறது.


புதன்கிழமை காலை 6 மணிக்கு 4ம் கால யாகபூஜை, விக்னேஷ்வரபூஜை, கன்னியாபூஜையும், காலை 9 மணிக்கு மேல் கடம்புறப்பாடு, விமான கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு விஷேர புஷ்ப அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad