தமிழக அரசின் டாப்செட்கோ மூலம் கடன்கள் -மாவட்ட ஆட்சியர் தகவல் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 8 July 2024

தமிழக அரசின் டாப்செட்கோ மூலம் கடன்கள் -மாவட்ட ஆட்சியர் தகவல்


 தமிழக அரசின் டாப்செட்கோ மூலம் கடன்கள் -மாவட்ட ஆட்சியர் தகவல்.



ஜூலை.08, தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறுதொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடள் மற்றும் குழுக்கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின்  மூலம் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.



தனிநபர் கடன் திட்டத்தில் சிறு வர்த்தகம்/வணிகம், விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருள்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிக பட்சமாக ரூ.15.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி  விகிதம் ரூ.1.25 இலட்சம் வரையில் 7% மற்றும் 1.25 இலட்சம் முதல் 15.00 இலட்சம் வரை  8% ஆகும்.



குழுக்கடன்(நுண்கடன்) இத்திட்டத்தில் சுய உதவிக் உறுப்பினர்கள் சிறுதொழில்/வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிக பட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையிலும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரையிலும் மகளிருக்கு ஆண்டுக்கு 6% வட்டி விகிதத்திலும் கடன் உதவி வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியடைந்திருத்தல் வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (GRADING) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிக பட்சமாக 20 உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இரு பாலருக்கான சுயஉதவிக்குழு (MIXED  self Help group) உறுப்பினர்களுக்கும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது.
கறவை மாட்டுக் கடன் திட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000/- வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஆண்டுக்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.



மேற்கண்ட கடன்தொகை பெற விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர்  வகுப்பினராகவும், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல்  வேண்டும்.  குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் சாதி, வருமானம் மற்றும்  பிறப்பிடச்சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம்,  ஆதார்; அட்டை நகல் மற்றும் வங்கிகோரும் ஆவண நகல்கள் ஆகும்.



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்,  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பப்படிவத்தை கட்டணமின்றி பெற்றும் அல்லது பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழக இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) படியிறக்கம் செய்தும், விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து  மேற்கூறிய சான்றுகள் மற்றும் ஆவணங்களுடன் தூத்துக்குடி இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), மத்திய/நகர/தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பித்து கடனுதவிகள் பெற்று பொருளாதாரத்தை மேம்படுத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad