ஏரல் - தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் ஜமாபந்தி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 7 June 2024

ஏரல் - தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் ஜமாபந்தி.


 ஏரல் - தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் ஜமாபந்தி.


தூத்துக்குடி மாவட்டம், ஜூன்.07, ஏரல்வட்டத்தில் 1433-ம்  பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ஜுன் 11-ஆம் தேதி தொடங்கப் பெற்று ஜுன் 20-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால்  நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
       
மேற்படி நாட்களில் வருவாய் தீர்வாயம் நடைபெறும் கிராமத்திற்குரிய பொதுமக்கள் அந்தந்த நாட்களில் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை வழங்கி தீர்வு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
                                                                  

முதலாம் நாள் - (11-06-2024)
2024ம் ஆண்டு ஜுன் மாதம் 11-ம் தேதி (செவ்வாய் கிழமை)
ஆறுமுகமங்கலம் உள்வட்டம்

10. ஆறுமுகமங்கலம்

11. சிறுதொண்டநல்லூர்

13. வாழவல்லான்

14. திருப்பணிசெட்டியாபத்து

18. கொற்கை

22. கொடுங்கனி

12. கொட்டாரங்குறிச்சி

இரண்டாம் நாள் (12.06.2024)
2024ம் ஆண்டு ஜுன் மாதம் 12-ம் தேதி (புதன் கிழமை)

17. மாரமங்கலம்

21. அகரம்

19. மஞ்சள்நீர்காயல்

20. பழையகாயல்

23. முக்காணி

39. இராஜபதி

41. புறையூர்



மூன்றாம் நாள் (13.06.2024)
2024ம் ஆண்டு ஜுன் மாதம் 13-ம் தேதி (வியாழக்கிழமை)
ஆறுமுகமங்கலம் உள்வட்டம்

45. நாலுமாவடி

42. அங்கமங்கலம்

40.சேதுக்குவாய்த்தான்



பெருங்குளம் உள்வட்டம்

01. தன்னூத்து

02. சிவகளை

04. கீழ்பிடாகை அப்பன்கோவில்

03. கீழ்பிடாகை கஸ்பா


நான்காம் நாள் (14.06.2024)
2024ம் ஆண்டு ஜுன் மாதம் 14-ம் தேதி (வெள்ளி கிழமை)

06. மங்களகுறிச்சி

05. பெருங்குளம்

07. நட்டாத்தி

09. திருப்பணிசெட்டிகுளம்

08. சாயர்புரம்

15. இருவப்பபுரம் பகுதி-1

16. இருவப்பபுரம் பகுதி-2



ஐந்தாம் நாள்: (18.06.2024)
2024ம் ஆண்டு ஜுன் மாதம் 18-ம் தேதி (செவ்வாய் கிழமை)
ஆழ்வார்திருநகரி  உள்வட்டம்

24. மழவராயநத்தம்

27. ஆதிநாதபுரம்

28. ஆழ்வார்திருநகரி

25. உடையார்குளம்

26. குறிப்பன்குளம்

29. வெள்ளமடம்




ஆறாம் நாள் (19.06.2024)
2024ம் ஆண்டு ஜுன் மாதம் 19-ம் தேதி (புதன்; கிழமை)

31. திருநாவீருடையார்புரம்

30. அழகியமணவாளபுரம்

34. திருக்களுர்

32. தேமாங்குளம்

35. கடையனோடை

33. நாசரேத்

37. தென்திருப்பேரை




ஏழாம் நாள் (20.06.2024)
2024ம் ஆண்டு ஜுன் மாதம் 20-ம் தேதி (வியாழன் கிழமை)



36. மாவடிப்பண்ணை

38. குருகாட்டூர்

43. மூக்குப்பீறி

44. கச்சனாவிளை

பொதுமக்கள் ஜமாபந்தியில் தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்துளார்.


தூத்துக்குடி மாவட்டம்
ஏரல் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad