தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குபேர பௌர்ணமி பூஜையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று (21.06.2024) இரவு குபேர பௌர்ணமி பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்காக குவிந்தனர்.
இதனை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி, திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வசந்தராஜ் அவர்கள் தலைமையில் 9 காவல் ஆய்வாளர்கள், 26 உதவி ஆய்வாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகளில் இன்று (22.06.2023) அதிகாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வசந்தராஜ் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment