நாசரேத் பேருந்து நிலையம் அருகே பரபரப்பு... சுவர் இடிந்து விழுந்து மீன் வியாபாரி படுகாயம்!
நாசரேத் பேருந்து நிலையம் அருகே தனியார் கட்டிட சுவர் இடிந்துவிழுந்ததில் மீன்வியா பாரி படுகாயம் அடைந்தார்.இச்சம்ப வத்தினால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நாசரேத் பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடம் உள்ளது. இதில் வணிக வளாகம், தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகிறது.3 மாடிகொண்ட இக்கட்டிடத்தின் மேல் தளத்தில் செல்போன் டவர் அமைக் கப்பட்டு உள்ளது. நேற்று காலை சுமார் 9 மணி அளவில் மூன்று மாடி கட்டடத்தின் மேல் சன்சைடு பகுதி கான்கிரீட்பெயர்ந்து கீழேவிழுந்துள் ளது.இதில் கட்டிடத்திற்கு கீழே நின்று கொண்டிருந்த நாசரேத் அரு கிலுள்ள வெள்ளமடத்தை சேர்ந்த மீன் வியாபாரியான முத்தையா(67) வலது கையில் கான்கிரீட் துண்டு விழுந்ததில் சிராய்ப்பு காயம் ஏற்பட் டுள்ளது. ஆனால் இக்கட்டிடத்திற்கு அருகில் உள்ள டீ கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் இக்கட்டிடத் திற்கு கீழே உள்ள பகுதியில் நாளி தழ்கள் படித்தவாறு ஓய்வெடுப்பது வழக்கம்.நாசரேத் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8.30 மணி அள வில் மாடி கட்டிடத்தின் ஒரு பகுதியில் சுவர் வலுவிழந்து திடீரென இடிந்து விழுந்தது.மழையினால் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்ட தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில் காயமடைந்த முத்தையா முதலுதவி செய்யப்பட்டு வீடு திரும்பினார். இதனால் டீ கடை அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது. நாசரேத் பேருந்து நிலையம் மற்றும் இரயில் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பயணிகள், தனியார் கட்டிட சுவர் இடிந்த சம்பவத்தை அறிந்து எச்சரிக்கையுடன் அந்த பகுதியை கடந்து சென்றனர். மூன்று மாடி கட்டிடத்திற்கு மேலே செயல்பட்டு வரும் செல்போன் டவரை அப்புறப் படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
நாசரேத் நிக்சன் செய்தியாளர்


No comments:
Post a Comment