கோவில்பட்டி - கி.ரா.நினை வரங்கத்தில் கலை இலக்கிய கோடை கொண்டாட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 27 May 2024

கோவில்பட்டி - கி.ரா.நினை வரங்கத்தில் கலை இலக்கிய கோடை கொண்டாட்டம்.


கோவில்பட்டி - கி.ரா.நினை வரங்கத்தில் கலை இலக்கிய கோடை கொண்டாட்டம்.


தூத்துக்குடி மாவட்டம் , மே.26, நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டம் 2024 கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. நிறைவு நாளன இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்களை வழங்கினார். அத்துடன் வந்திருந்த அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


இந்நிகழ்வில் எழுத்தாளர் தமிழ்செம்மல் கா.உதயசங்கர் பாலபுரஸ்கா விருதாளர், எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் உ.வே.சா.விருதாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தூத்துக்குடி மாவட்டம் & கோவில்பட்டி தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad