பாட்டக்கரை ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு விழா
பாட்டக்கரை ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு விழா நடந்தது. தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பாட்டக்கரை தூய இம்மானுவேல் ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் 10 நாட்கள் நடந்தது.இதன் நிறைவு விழா ஆலய வளாகத்தில் நடந்தது. சேகர தலைவர் ஜெபாஸ் ரஞ்சித் தனராஜ் தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைத்தார். அக்சாள், சங்கீதா ஆகியோர் விபிஎஸ் இயக்குனர்களாக செயல்பட்டனர். கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதையடுத்து மாணவ_ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சேகர தலைவர் ஜெபாஸ், சபை ஊழியர் கிறிஸ்டோபர், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஜெபசிங், ஆலய பணியாளர் ஜாண் தங்கத்துரை மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.
நாசரேத் நிக்சன் செய்தியாளர்.

No comments:
Post a Comment