உள் வாங்கியது செந்தூர் கடல்.
தூத்துக்குடி மாவட்டம், மே 09. திருச்செந்தூர் கடல் பகுதி கரையில் இருந்து சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியுள்ளது.
ஆபத்தை உணராமல் பக்தர்கள் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்து வருவதால், காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இது போன்ற நிகழ்வு கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சுனாமி ஏற்பட்ட காலங்களில் இது போன்ற நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment