திருச்செந்தூர் பஜாரில் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் டி.எஸ்.பி.வசந்தராஜ் திறந்து வைத்தார்.
திருச்செந்தூர் மே -1 திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கோடை வெப்பத்தை தனிக்கும் வகையில் இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க மாநில தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். நீர் மோர் பந்தலை டி.எஸ்.பி. வசந்தராஜ் பொதுமக்களுக்கு இலவச நீர் மோர். தர்பூசணி. இளநீர் ஆகியவைகளை வழங்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இந்துவியாபாரிகள் சங்க நகர தலைவர் மீனாட்சிசுந்தரம் செயலாளர் பிருதிவிராஜ். பொருளாளர் கிருஷ்ணன். உறுப்பினர் ஆனந்தகுமார். மற்றும் வியாபாரிகள். பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
.

No comments:
Post a Comment