தூத்துக்குடியில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 2 May 2024

தூத்துக்குடியில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!

 


தூத்துக்குடியில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!


தூத்துக்குடியில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் நேற்று திறந்து வைத்தார்.


தூத்துக்குடி கீதா மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே, புதிய பேருந்து நிலையம் அருகே, பழைய பேருந்து நிலையம் அருகே மற்றும் கலைஞர் அரங்கம் முன்பு ஆகிய இடங்களில் கடும் கோடை வெப்பத்தில் மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்களை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் - சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம்,  மாநகராட்சி மண்டல தலைவர், கலைச்செல்வி,  மாவட்ட மகளிர் அணி தலைவர் கவிதா தேவி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார் உள்பட திமுக நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad