மக்களவை தேர்தலை முன்னிட்டு ரோந்து வாகன (Mobile Party) காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் இன்று அறிவுரை கூட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 18 April 2024

மக்களவை தேர்தலை முன்னிட்டு ரோந்து வாகன (Mobile Party) காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் இன்று அறிவுரை கூட்டம்.


நாளை நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு ரோந்து வாகன (Mobile Party) காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் இன்று அறிவுரை கூட்டம்.


நாளை (19.04.2024) நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து வாகன (Mobile Party) காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் இன்று (17.04.2024) அறிவுரை கூட்டம் நடைபெற்றது.



இதில் மொபைல் பார்ட்டி உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் அவர்கள் தேர்தல் பணியின்போது வாக்கு இயந்திரம் வைக்கும் மையங்களில் இருந்து பாதுகாப்பாக வாக்கு இயந்திரத்தை பெற்று வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒப்படைப்பது மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேவைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள்  அறிவுரைகள் வழங்கினார்.



இந்த அறிவுரை கூட்டத்தில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. உன்னிகிருஷ்ணன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.



தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad