பெண்கள் பண்டிகையை முன்னிட்டு பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் மாபெரும் பேரணி! சேகர தலைவர் நவராஜ் துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 10 April 2024

பெண்கள் பண்டிகையை முன்னிட்டு பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் மாபெரும் பேரணி! சேகர தலைவர் நவராஜ் துவக்கி வைத்தார்.


பெண்கள் பண்டிகையை முன்னிட்டு பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில்  நடந்த மாபெரும் பேரணியை சேகர தலைவர் நவராஜ் துவக்கி வைத்தார். தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம்  சேகரம் பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில்  பெண்கள் பண்டிகையை முன்னிட்டு மாபெரும் பேரணி நடந்தது.  சேகர தலைவர் நவராஜ் தலைமை வகித்து ஜெபித்து பேரணியை தொடங்கி வைத்தார். 

பெண்கள் ஐக்கிய சங்க தலைவி பிரிடா நவராஜ் முன்னிலை வகித்தார்.  பேரணி ஆலயத்தில் இருந்து தொடங்கி மெயின்ரோடு, சாலைதெரு,  தெற்கு தெரு வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது.  இதையடுத்து  பண்டிகையை முன்னிட்டு ஆலயத்தில் பரிசுத்த நற்கருணை ஆராதனை நடந்தது. லோவிசா, அலீஸ்பாப்பா ஆகியோர் வேதப்பாடம் வாசித்தனர். தூத்துக்குடியைச்சார்ந்த ஏஞ்சல் தேவ செய்தி கொடுத்தார்.இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். 


ஏற்பாடுகளை  பிரகாசபுரம் சேகர தலைவர் நவராஜ் தலைமையில் சபை ஊழியர் ஸ்டான்லி,  பெண்கள் ஐக்கிய சங்க பொறுப்பாளர்கள் நல்லம்மாள் மார்க்கெட், சரோஜா மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.


- நாசரேத் நிக்சன் செய்தியாளர் 

No comments:

Post a Comment

Post Top Ad