மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 26 April 2024

மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

 


மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா



நாசரேத் அருகே உள்ள  முதன்மை கட்டிடத்திற்கு நன்கொடை யாளர்களின் பெற்றோர் ஞாபகார்த்தமாக    பெயர் சூட்டும் விழா, ஆய்வகக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா, மாணவிகளுக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சைக்கிள் நிழல் குடை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
 
பள்ளி தாளாளர் செல்வின் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் எட்வர்ட் வரவேற்றார்.  தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன்  இறை வணக்க மேடையையும், முதன்மை கட்டிடத்தின் நன்கொடை யாளர்களின் பெயர் பலகையையும்  திறந்து வைத்தார். திருமண்டல உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங்   மாணவிகளுக்கான சைக்கிள் நிழற்குடையை திறந்து வைத்தார் ‌.   உப தலைவர் தமிழ்செல்வன் ஆரம்ப ஜெபம் செய்ததோடு புதிய  ஆய்வு கூட கட்டிடத்திற்கான  அடிக்கல்லை நாட்டினார் ‌.  


முன்னதாக தூய மாற்கு ஆலய பாடகர் குழுவினர்     பாடல்கள் பாடினர். 
இதில் திருமண்டல  குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக், பொருளாளர் டேவிட் ராஜ்,   மூக்குப்பீறி சேகர தலைவர் ஞானசிங் எட்வின், குருமார்கள் வெல்லிங்டன், ஜெபராஜ், ஜான் சாமுவேல், மைக்கேல்ராஜ்,   ஜேசன்ஜோதி, ரூபன்மணிராஜ், ரஞ்சித் ஆபிரகாம், உதவிகுரு ஜெனோ செல்வகுமார், நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ், முன்னாள் மூக்குப்பீறி கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஆனந்தஜோதிபாலன்,  நாசரேத் டவர்  அரிமா சங்க  இயக்குனர் அருள்பணி, ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்  தேவதாசன் ஞானராஜ்,  நாசரேத் மர்காஷிஸ் சிட்டி அரிமா சங்க செயலாளர் ஆசிரியர் விவின் ஜெயக்குமார், நாசரேத் ராஜசிங், ராஜா மற்றும்  பள்ளி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், ஆசிரியப் பெருமக்கள்,  ஊர் பெரியவர்கள் , மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad