நாசரேத் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை
வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19 ம்தேதி நடைபெறும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். திருச்செந்தூர் பறக்கும் படை அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் சிறப்பு சப்_ இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் முன்னிலையில் காவலர்கள் சரவணன், பிரபா ஆகியோர் அடங்கிய படையினர் நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளையில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த சாலை வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு அனுப்பி வைத்தனர்.
நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:
Post a Comment