கயத்தாறு - பேருந்தால் அவதியுற்ற மாணவர்கள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 15 April 2024

கயத்தாறு - பேருந்தால் அவதியுற்ற மாணவர்கள்.

தூத்துக்குடி மாவட்டம், ஏப்ரல் 15, கயத்தாறு அருகே ராஜா புதுக்குடியில் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்தால் அரசு தேர்வு எழுத சென்ற 6 மாணவர்கள் அவதி.


மேற்படி ராஜாபுதுக்குடி பகுதியில் இருந்து ஏராளமானோர் நெல்லை, பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். அதே போல பல தரப்பட்ட மக்கள் பல்வேறு வேலைகளுக்காக நெல்லை சுற்று வட்டார பகுதிகளுக்கு தினசரி வந்து செல்கின்றனர்.


இந்நிலையில் இன்று காலை 7.45 மணிக்கு கோவில்பட்டியில் இருந்து கயத்தாறு, கங்கை கொண்டான் மார்க்கமாக திருநெல்வேலி செல்லும் சாதாரண வண்டி எண் த.நா. 72ந 0430 என்ற அரசு பேருந்து மேற்படி ராஜபுதுக்குடி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றுள்ளது.

இதனால் அரசு பொது தேர்வு எழுத செல்ல காத்திருந்த மாணவ மாணவியர் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.
இது போன்ற சம்பவம் அடிக்கடி நடப்பதாகவும், இனி இது போல சம்பவம் நடைபெறாமல் இருக்க சம்பந்த பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மணவ கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad