நாசரேத் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 7 March 2024

நாசரேத் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு ஆர்ப்பாட்டம்!


நாசரேத் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரத ஸ்டேட் வங்கியை கைப்பாவையாக பயன்படுத்தி பாஜக அரசு, இதுவரை செய்த முறைகேடுகள் மற்றும் சதிகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளதின் பேரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆணைக்கிணங்க ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ஊர்வசி எஸ். அமிர்தராஜ் ஆலோசனைப்படி ஆழ்வார்திருநகரி வட்டாரத் தலைவர்கள் பாலசிங், கோதண்டராமன் ஆகியோர் தலைமையில் நாசரேத் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வகுமார், ஆத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னத்துரை, ஆழ்வார்திரு நகரி காங்கிரஸ் கமிட்டி  பொறுப்பாளர் அபுதாகிர் ஆகியோர் முன்னிலையில் நாசரேத் பாரத ஸ்டேட்வங்கி முன்பு மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

ஆர்ப்பாட்டத்தில் ஜெயக்குமார், மாரியம்மன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜன், காளிதாஸ்ராஜன், விஜயதரன், அரிகிருஷ்ணன், வனசெல்வன், இசக்கி ராஜா, மோகன்ராஜ், பாலகிருஷ்ணன், ஜாபர்ராஜன், செல்வகுமார், பேரூராட்சி கவுன்சிலர் எட்வர்ட் கண்ணப்பா, பிரகாஷ், சண்முகம், பாஸ்கர், லிங்கதுரை, ஜெயக்கொடி, சிவசக்திவேல், வசந்தி, பொன்செல்வி, ஜெயந்தி, முத்துச்செல்வி, முத்துக்குமார், ஞானதுரை, முன்னாள் நகர தலைவர் சந்திரன், காங்கிரஸ் பிரமுகர் அசோகன், பிரேம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


- நிக்சன், செய்தியாளர், நாசரேத். 

No comments:

Post a Comment

Post Top Ad