திருச்செந்தூர் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதார பதியில் அவதார தின விழா 2லட்சம் பக்தர்கள் குவிந்தனர் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 5 March 2024

திருச்செந்தூர் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதார பதியில் அவதார தின விழா 2லட்சம் பக்தர்கள் குவிந்தனர்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் 192வது ஆண்டு அவதார தின விழா  வள்ளியூர் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை சார்பில் நடைபெற்றது. 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர் சனிக்கிழமை இரவு  சனி,ஞாயிறு இரு தினங்கள்  நடைபெற்றது விழாவில் முதல் நாள் மார்ச் 2ம்தேதி சனிக்கிழமை அதிகாலை 5மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6 மணிக்கு அன்னதர்மம்,பகல் 12மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை 1மணிக்கு அன்னதர்மம் மாலை 7 மணிக்கு பணிவிடை அய்யா புஷ்ப வாகன பவனி தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது. 

தொடர்ந்து திரு ஏடு வாசிப்பு இரவு 9 மணிக்கு அகில திரட்டு அம்மானை கருத்துரைகள்,18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அய்யா வைகுண்டர் அவதார மகிமை,துவையல் தவசு, அகில திருட்டில் வாழ்வியல் கருத்து ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெற்றது இரவு சிவசந்திரன்  இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது பின்னர் பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு தலைவர் வள்ளியூர் தர்மர் பரிசு வழங்கினார்.


இரண்டாம் நாள் மார்ச் 3ம்தேதி அதிகாலை 5மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்ந்தால், அபயம் பாடுதல் 6.28  மணிக்கு சூரிய உதயத்தில் கடலில் பதம் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது அய்யாபதியில் இருந்து மேளதாளம் முழங்க அய்யாவழி அகில திருக்குடும்பத்தினர் தலைவர் தர்மர் தலைமையில் கடலில் சூரியோதயம் கண்டவுடன் பதம் விட்டனர். அப்போது வின் அய்யா அரகர அரகர என முழக்கமிட்டனர் பின்னர் சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதார பதிக்கு அழைத்து வந்தனர் தொடர்ந்து அவதார தின விழா பணிவிடை, அன்ன தர்மம், இனிமம் வழங்குதல் நடைபெற்றது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் துணைத்தலைவர் அய்யாப்பழம் செயலாளர் பொன்னுத்துரை. பொருளாளர் கோபால் நாடார், துணைசெயலாளர் ராஜேந்திரன் நாடார் இணைத் தலைவர் பால்சாமி திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷ்த்குமார். சட்ட ஆலோசகர் வக்கில் சந்திரசேகரன் நிர்வாக குழு இணைத்தலைவர்கள் ராத்துரை, விஜயகுமார், செல்வின், இணைச்செயலாளர்கள் தங்க இருஷ்ணன் சுதேசன், வரதராஜ பெருமாள். ராதாகிருஷ்ணன், உறுப்பினர்கள் ஆதிநாராயணன் இளங்கோ ராமமூர்த்தி, பாலகிருஷ்ணன் உள்பட சபையினர் செய்து வருகின்றனர்.


- MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad