கோவில்பட்டி - வேளாண் துணை இயக்குநரை தாக்கிய தற்காலிக ஊழியா். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 7 February 2024

கோவில்பட்டி - வேளாண் துணை இயக்குநரை தாக்கிய தற்காலிக ஊழியா்.

தூத்துக்குடி வேளாண்மை துணை இயக்குநா் (உழவா் பயிற்சி மையம் மற்றும் உழவா் நலம்) மனோரஞ்சிதம் (51). இவா், நேற்று கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு ஆய்வு பணிக்காக வந்திருந்த போது, அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியா்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டாராம். 


அப்போது வட்டார தொழில் நுட்ப மேலாளா் தனபாலன் (தற்காலிக ஊழியா்) வருகை பதிவேட்டில் கையெழுத்திடாத நிலையில் இருந்து வந்தது குறித்து துணை இயக்குநா் கேட்டாராம். 

அப்போது அங்கு இருந்த தனபாலனுக்கும் துணை இயக்குநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனபாலன் துணை இயக்குநரை தாக்கியதாக கூறப்படுகிறது.


இதில், காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். 

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.
 

No comments:

Post a Comment

Post Top Ad