திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி திருவிழா கொடிப்பட்டம் வீதி உலா! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 13 February 2024

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி திருவிழா கொடிப்பட்டம் வீதி உலா!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (பிப்.14) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. முருகபெருமானில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில்  ஆண்டு தோறும் நடக்கும் முக்கிய விழாக்களில்  மாசித் திருவிழாவும் ஒன்றாகும். 

இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா நாளை  (பிப்.14) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு கொடிபட்டம் வீதி உலா இன்று மாலை நடந்தது. 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 3-ம் படி செப்பு ஸ்தலத்தார் குளத்துமணி அய்யர், யானை மீது அமர்ந்து கையில் ஏந்தியவாறு நான்கு ரத வீதி மற்றும் உள்மாட வீதிகளில் உலா வந்து கோயிலில் சேர்ந்தது. 


நிகழ்ச்சியில், திருச்செந்தூர் முருகன் கோயில் பேஸ் கார் ரமேஷ், திருஸ்வதந்திர ஸ்தலத்தார் சபை தலைவர் மூர்த்தி கைங்கர்ய சபை தலைவர் சந்திரமௌலி மற்றும் இருசபை  பொறுப்பாளர்கள் மற்றும் 14 ஊர் செங்குந்தர் சமுதாய உறவின்முறை நாட்டு தலைவர் நடராஜன், அவிருத்தி சங்க தலைவர் பாலகிருஷ்ணன், பொது செயலாளர் பாலசுப்ரமணியன் பொருளாளர் மாரிமுத்து, திரிசுதந்திரர்கள் கோயில் பணியாளர்கள், 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக-சுந்தரராமன்.

No comments:

Post a Comment

Post Top Ad