ஆழ்வார்திருநகரி - ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கருடசேவை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 25 February 2024

ஆழ்வார்திருநகரி - ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கருடசேவை.

தூத்துக்குடி மாவட்டம், பிப்.25, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவ திருப்பதி தலங்களில் 9வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். 


அதன் படி இந்த ஆண்டு மாசித் திருவிழா கொடியேற்றம் கடந்த 20ந்தேதி நடந்தது. ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் திருமஞ்சனம் தீர்த்த விநியோக கோஷ்டி நடைபெற்றது. 


மாலை 5 மணிக்கு சாயரட்சை
5.30 மணிக்கு நம்மாழ்வார் மற்றும் பொரிந்து நின்ற பிரான் வாகன முன்பாக எழுந்தருளி பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 


பின்னர் மாடவீதி நான்கு ரதவீதி புறப்பாடு நடந்தது. நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், அர்ச்சகர்கள் கண்ணன், விவேக், கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம்(எ) கணேசன், உறுப்பினர்கள் கிரிதரன், செந்தில் குமார் காளிமுத்து, ராமலட்சுமி.முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையும் மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். 


24 ம் தேதி கருடசேவை நிகழ்ச்சியும், 28 ம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. 29 ம் தேதி இரவில் பெருமாள் தெப்ப உற்சவமும் நடக்கிறது. 

சுவாமி பொலிந்து நின்ற பிரான் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 
மார்ச் 1 ஆம் தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து  அருள் பாலிக்கிறார். 


2 ம் தேதி மாசி தீர்த்தவாரி நடைபெருகிறது. விழாவில் இறுதி நாளான 3 ம் தேதி காலையில் சுவாமி நம்மாழ்வார்  இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளி அங்கு திருமஞ்சனம் கோஷ்டி, சாத்து முறைக்கு பின் இரவு சுவாமி பல்லக்கில் ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளுகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad