திறனாய்வு தேர்வில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 24 February 2024

திறனாய்வு தேர்வில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை!


திறனாய்வு தேர்வில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளியில், கல்வி, விளையாட்டு, நன்னெறி சார்ந்த நிகழ்வுகள், தற்கா ப்பு கலை மற்றும்  கல்வி இணைச்செயல்பாடுகள்  மாணவர்களுக்கு சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கு மாணவர்க ளுக்கு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

அதன் தொடர்ச்சியாக, திறனாய்வு தேர்வுகளில் பங்கேற்பதற்கு மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. பயிற்சி பெற்று, திறனாய்வு தேர்வில் பங்கு பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அபிஷேக் எப்ராயிம், முத்து ராஜேஷ் மற்றும் ஸ்ரீராம் ஆகிய மாணவர்கள்  வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  ரெஜினி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். 


மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) குருநாதன்,  தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பேசினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொடர் ந்து நான்கு ஆண்டுகளுக்கு தமிழக அரசின் கல்வி உத வித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவர்க ளையும் பயிற்சி அளித்த ஆசிரியர்களையும், ஆசிரி யைகளையும் பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பாராட்டினர். 

No comments:

Post a Comment

Post Top Ad