சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் பழுதான சங்கு மீண்டும் ஒலிக்குமா? - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 21 February 2024

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் பழுதான சங்கு மீண்டும் ஒலிக்குமா?


சாத்தான்குளம்  பழைய பஸ் நிலையத்தில்  நேரம் காட்டு வகையில் ஓலித்து வந்த சங்கை மீண்டும் ஓலிக்க செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில் தனிநபர் ஞாபமாக உயர்கோபுர சங்கு அமைக்கப்பட்டு நேரத்தை காட்டு வகையில் காலை 9மணி., மதியம் 1மணி, மாலை 6மணி மற்றும் இரவு 9மணி என ஒலித்து வந்தது. இதனை  பொதுமக்கள், வியாபாரிகள் அதன் ஒலியை வைத்து தங்களது  பணிகளை துரிதப்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த சங்கானது கடந்த சில மாதங்களாக  இயங்காமல் முடங்கி கிடக்கிறது. அதில் உள்ள ஒலிக்கும் சங்கு பழுதானதால் சீரமைக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது.  நாகரிக வளர்ச்சி வந்தாலும் 30 ஆண்டுகளாக ஒலித்த வந்த சங்கொலி இல்லாமல் வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பார்பில் உள்ளனர்.  தனியாரிடமிருந்து பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு  செயல்பட்டு வந்தது தற்போது  பராமரிக்கப்படாமல் உள்ளது. 


ஆதலால்  தானியங்கி சங்கை சம்பந்தப்பட்டவர்கள் கவனித்து நேரம் காட்டு வகையில்  சங்கை மீண்டும்  ஒலிக்க செய்ய வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள்   விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad