சாத்தான்குளம் நூலகத்துக்கு நீட் தேர்வு புத்தகங்கள் வழங்கல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 24 February 2024

சாத்தான்குளம் நூலகத்துக்கு நீட் தேர்வு புத்தகங்கள் வழங்கல்.


சாத்தான்குளம் அரசு நூலகத்திற்கு நீட் தேர்வுக்கான புத்தகங்களை நகர திமுக செயலாளர் மகா இளங்கோ வழங்கினார். சாத்தான்குளம் இராமகோபால கிருஷ்ண பிள்ளை அரசு கிளை நூலகத்தில் நீட் தேர்வு படிக்கும் மாணவர்களுக்காக படித்து வரும் மாணவர்களுக்காக நீட் போட்டி தேர்வுக்கான புத்தகங்களை நகர திமுக செயலாளர் மகா இளங்கோ  நூலகர் சித்திரை லிங்கத்திடம்  வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் நூலகர்  இசக்கி அம்மாள், நூலக பணியாளர்  மைக்கேல் ராஜா. மற்றும் வாசகர்கள் பாலா மணி,மாடசாமிஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad