மாசார்பட்டி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 7 February 2024

மாசார்பட்டி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பண்டாரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பராஜ் மகன் ஜெயசிங் (25). இவர் கடந்த சில தினங்களாக வேலைக்குச் செல்லவில்லையாம். 

இதனால் அவரது தாயார் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயசிங்  மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் விஷப் பாட்டிலுடன் மதுரை செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். 


பின்னர் அவர் சிந்தலக்கரை ஓட்டல் அருகே பேருந்தை நிறுத்தியபோது, அங்கு இறங்கிய அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். 

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். 

இதுகுறித்து மாசார்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

No comments:

Post a Comment

Post Top Ad