திருச்செந்தூரில் அறிவுசார் மையம் கட்டிட பணிகளை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 1 February 2024

திருச்செந்தூரில் அறிவுசார் மையம் கட்டிட பணிகளை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி!


திருச்செந்தூரில் ரூ.2.83 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் கட்டுமான பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி  ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,  "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  அறிவித்ததைத்தொடர்ந்து, இன்று (01.02.2024) திருச்செந்தூர் நகராட்சி நகராட்சியில் ரூ.2.83 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மைய கட்டிடத்தின் கட்டுமான பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன், மண்டல இயக்குனர் நகராட்சி நிர்வாகம் விஜயலெட்சுமி, திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் கண்மணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்  ஆகியோர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad