திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிப். மாத உண்டியல் வருவாய் ரூ.4கோடியே 64 லட்சம்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 29 February 2024

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிப். மாத உண்டியல் வருவாய் ரூ.4கோடியே 64 லட்சம்!


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிப்ரவரி மாதம் உண்டியலின் வருவாய் ரூ.4கோடியே 64லட்சத்தி 92 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிப்ரவரி மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி பிப்.26,27 ஆகிய தினங்களில் கோவில் வெளி பிரகாரத்தில் உள்ள வஸந்த மண்டபத்தில் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமையிலும் திருக்கோயில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையிலும் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

உண்டியல் எண்ணும் பணியில் பதினெண்  சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினரும் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணி குழுவினரும் ஈடுபட்டனர். அதில் கோவில் நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.4 கோடியே 62 லட்சத்தி 68ஆயிரத்தி 265 ரூபாயும். கோசாலை பராமரிப்பு உண்டியலில் 60,814 ரூபாயும். யானை பராமரிப்பு உண்டியலில் 1லட்சத்தி 45ஆயிரத்தி 85 ரூபாயும். 2024 மாசி திருவிழா தற்காலிக உண்டியல்களின் மூலம் ரூ.18,378 ரூபாயும். மொத்தம் ரூ. 4கோடியே 64 லட்சத்தி 92 ஆயிரத்தி 542 ரூபாயும், தங்கம் 2390 கிராமும், வெள்ளி 51,000 கிராமும், பித்தளை 2,22,000 கிராமும், செம்பு 29,000 கிராமும், தகரம் 5500 கிராம் மற்றும் அயல்நாட்டு நோட்டுகள் 727ம் கிடைத்துள்ளது. 


நிகழ்ச்சியில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், உதவி ஆணையர் ஜி.செல்வி, கண்காணிப்பாளர் ரவீந்திரன், ஆய்வர் செந்தில் நாயகி, அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன்,கருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக-சுந்தரராமன் 

No comments:

Post a Comment

Post Top Ad